பிரித்தானியாவில் கடைகளுக்குள் நுழைய தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டாயமா? சுகாதார செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியாவில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள கடைகள் மற்றும் பாப்களுக்குள் மக்கள் நுழைய உள்ளூர் தடுப்பூசி பாஸ்போர்ட்டை கட்டாயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சமீபத்தில் பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் கூறினார்.

டொமினிச் ராப்-ன் கருத்து பிரித்தானியர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடைகள் மற்றும் பாப்களுக்குள் நுழைய தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படாது என பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு சில உலக நாடுகள், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே தங்கள் நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற விதியை கொண்டு வர தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

அவ்வாறான நிலையில், மக்கள் பயணம் செய்வதற்காக தடுப்பூசி போடப்பட்டதைக் காண்பிப்பது முக்கியம்.

நாங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பிரித்தானியர்கள் அந்த நாடுகளுக்கும் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment