பிரெக்சிட்டிலிருந்து தப்ப புது கடல் வழியை கண்டுபிடித்துள்ள பிரான்ஸ்!

by Lifestyle Editor
0 comment

பிரான்சிலிருந்து அயர்லாந்து குடியரசுக்கு செல்வதற்கு பிரித்தானியா வழியாக செல்வதுதான் எளிய வழி.

ஆனால், பிரெக்சிட் கடுமையான கட்டுப்பாடுகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தியுள்ளதால், அயர்லாந்துக்கு செல்ல பிரித்தானியாவை தவிர்த்து வேறொரு புதிய கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்துள்ளது பிரான்ஸ்.

படகுப்போக்குவரத்து நிறுவனங்கள் பிப்ரவரி 4ஆம் திகதி முதலே இந்த புதிய மார்க்கத்தில் படகு போக்குவரத்தை துவக்கிவிட்டனவாம்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு படகுப் போக்குவரத்து நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியா வழியாக அயர்லாந்துக்கு பயணிப்பது வேகமானது மட்டுமல்ல செலவு குறைவானதும் கூட.

என்றாலும், பிரெக்சிட் காரணமாக சுங்கச் சோதனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளதால், படகுப்போக்குவரத்து நிறுவனங்கள் பிரித்தானியா வழியாக செல்வதையே தவிர்த்து வருகின்றனவாம்.

Related Posts

Leave a Comment