உலகில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 10.90 கோடியைக் கடந்துள்ளது

by Lankan Editor
0 comment

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் முழு உலகிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.90 கோடியைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 இலட்சத்தைத் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.10 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.54 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98 ஆயிரத்து 900-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

Related Posts

Leave a Comment