நீ ஒரு பெண்ணினம்…. என் கஷ்டம் உனக்கு புரியுதா? திருமணம் குறித்து பேசிய சிம்பு : தீயாய் பரவும் வீடியோ

by News Editor
0 comment

அண்மைக்காலமாக சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் கச்சிதமாக தோற்றமளிக்கிறார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் இன்னும் உற்சாகமாகி உள்ளனர்.

காதலர் தினமான இன்று அவர் தமது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் வளர்ப்பு நாயுடன் சிம்பு பேசுகிறார். அதில், “நீ ஒரு பெண்ணினம்.. நீ வளர்ந்து ஒரு ஆண் இனத்தை பார்த்து பழக வேண்டும். அதனுடன் உறவு உண்டாக வேண்டும். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் முதலில் எனக்கு திருமணம் ஆக வேண்டும்.

கல்யாணம் ஆகாமல் இருக்கிறேன் என்னும் போது நீ ஜாலியாக இருக்கலாம் என்று நினைக்க முடியாது.

பிறகு என் மீது கோபித்துக்க கூடாது. அதனால் நீ செய்ய வேண்டியதெல்லாம், இரவு முழுவதும் அமர்ந்து எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அப்போது தான் உனக்கு நடக்க வேண்டியதும் நடக்கும். என் கஷ்டம் உனக்கு புரியுதா? என்ன அப்படி பார்க்கிறாய் .. எனக்கு திருமணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா?” எனப் புலம்புகிறார். இறுதியில் ‘தங்கம்’ என அந்த செல்ல நாயுடன் சிம்பு கொஞ்சுகிறார். அதுவும் அவருடன் கொஞ்சுகிறது.

Related Posts

Leave a Comment