எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்மிடா எனும் ஊரை சேர்ந்தவர் ரீம் எல் கவ்லி, இவருக்கு வயது 12.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஆசிரியாராய் மாறியுள்ளார் ரீம். வீடு வீடாகச் சென்று 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுத்து வருகிறார்.
ரீம் எல் கவ்லியின் இந்த முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
இதுகுறித்து ரீம் பேசுகையில், “தெருக்களில் விளையாடுவதற்கு பதில் பாடம் கற்றுத்தந்தால் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதன்படி, காலையில் எழுத்து பிரார்த்தனை செய்து விட்டு, அவர்களுக்கு வகுப்பு எடுக்க துவங்கி இருக்கிறேன்.
அரபு, கணக்கு, ஆங்கிலப் பாடங்களை குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறேன். முதலில், நோட்புக் மூலம் பாடம் எடுக்க துவங்கினேன். தற்போது கரும்பலகையில் பாடம் எடுத்து வருகிறேன் என்றார்.
இவரது சேவை குறித்து கேள்விப்பட்ட உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று, தற்போது அவருக்கு ஒரு வெள்ளை போர்டையும், மார்க்கர்களையும் வழங்கி உள்ளது. ரீம்மை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளது.
அவரிடம் படிக்கும் 9 வயதான முகமது அப்தெல் மோனீம் பேசுகையில், “பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பள்ளியில் நாங்கள் கற்றுக்கொண்டதை மறந்துவிடக் கூடாது என்பதற்காக ரீம் எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க துவங்கினார்.
நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். எளிமையாக புரியும் வகையில் அவர் எங்களுக்கு அரபு, கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைப் நான் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.
ரீம்மின் இந்த சேவை உலகில் உள்ள பிரபல ஊடகங்கள், நாளிதழ்களில் வெளியாகி அவரை பிரபலமடைய செய்துள்ளது. சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த செய்திகள் பரவ, நெட்டிசன்களும் தங்களது வாழ்த்தக்களை தெரிவித்து வருகிறார்கள்.