நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை காலப்பகுதியில் 397 பேர் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

இலங்கையயில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத் உள்ளார்.

இதற்கமைவாக நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 802 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 654 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களில் 801 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 627 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே நேற்யை தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 865 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இதனையடுத்து, கொரோனாதொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கையும் 68 ஆயிரத்து 696 ஆக காணப்படுகிறது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 561 பேர் சிகிச்சைப் பெற்று வருவதுடன், சந்தேகத்தின் பேரில் 598 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

 

 

Related Posts

Leave a Comment