சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறி தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா.
இவர், சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் தற்கொலை தற்போது வரை நம்பமுடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது.
இவரின் மறைவு ரசிகர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தினாலும், ஆறுதல் அளிக்கும் விதமாக இவர் நடித்து முடித்துள்ள ‘கால்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான ‘கால்ஸ்’ படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள், இவருடைய சொந்த வாழ்க்கைக்கு தொடர்புடையதாக உள்ளது மற்றொரு ஆச்சர்யம் எனலாம்.
இந்நிலையில், இந்த திரைப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக தற்போது படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.