லவ்வர்ஸ் டே: குழந்தைகளுடன் குதூகலமாக கொண்டாடிய பிக்பாஸ் நடிகை!

by Lifestyle Editor
0 comment

காதலர் தினத்தையொட்டி நடிகை சாக்ஷி அகர்வால் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று உணவு வழங்கியிருக்கிறார்.

நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிக பிரபலமானார். பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்த சாக்ஷிக்கு, பிக் பாஸுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தது என்றே சொல்ல வேண்டும். குட்டி ஸ்டோரியை அவர் நடித்திருக்கும் சின்ட்ரெல்லா படம் ரிலீஸாக உள்ளது. ஆர்யாவுடன் ‘டெடி’ என்னும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாக்ஷி ஒப்பந்தம் நடிக்கவிருக்கும் தி நைட், அரண்மனை 3 ஆகிய படங்களின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

இத்தகைய பிஸியான வாழ்க்கை பயணத்திலும் தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்விக்க சாக்ஷி தவறுவதில்லை. அடிக்கடி ரெசார்ட் சென்று தனக்கென நேரத்தை செலவிடும் சாக்ஷி, தனது பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவார். அந்த வகையில் இன்று காதலர் தினத்தையொட்டி, சென்னை பெரும்பாக்கத்தில் இருக்கும் நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப் காப்பகத்திற்கு சென்று கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் சாக்ஷி.

இது குறித்து பேசிய அவர், மனிதர்கள் மீது கொண்ட அன்பை வெளிக்காட்டுவது தான் காதலர்கள் தினம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகளை பிடித்திருப்பதால் அவர்களுடன் இந்த தினத்தை கொண்டாடுகிறேன். போன வருடம் எய்ட்ஸ் பாதித்தவர்களுடன் கொண்டாடினேன். இந்த வருடம் இந்த குழந்தைகளுடன். அடுத்த வருடமும் இது தொடரும் என்று அழகாக கூறினார் சாக்ஷி.

Related Posts

Leave a Comment