ஹர்பஜன் அங்கிள் நீங்க விலகிக்கோங்க… கும்ப்ளே உடன் போட்டி போடும் அஸ்வின்!

by Lifestyle Editor
0 comment

இங்கிலாந்துடனான டெஸ்ட்டில் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட் எடுத்த ஸ்பின்னர்களில் ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடிவருகிறது. முதல் போட்டியிலிருந்தே ஸ்பின்னர் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசிவருகிறார். அதே ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்கிறார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் ஆடவந்த இங்கிலாந்து அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்திவருகின்றனர். அவர்களில் மூவர்களை அஸ்வின் வழியனுப்பி வைத்திருக்கிறார்.

முதல் விக்கெட்டாக சிப்லேவை வீழ்த்திய அஸ்வின் இரண்டாவதாக லாரன்ஸை தூக்கினார். இந்திய மண்ணில் அவர் வீழ்த்திய 266ஆவது விக்கெட்டாகும். இதன்மூலம் ஹர்பஜனை (265) பின்னுக்குத் தள்ளினார். 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளே முதலிடத்தில் நீடிக்கிறார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் முறையே கபில்தேவ் (219), ஜடேஜா (157) ஆகியோர் இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment