“எங்கள் நாட்டில் எல்லா நாளும் காதலர் தினம் தான்” – வைரமுத்துவின் லேட்டஸ்ட் காதல் கவிதை!

by Lifestyle Editor
0 comment

டெடி பியர் டே, கிஸ் டே என இப்படியாக பல்வேறு டிரெய்லர்கள் வெளியாகி இறுதியாக வேலண்டைன்ஸ் டே எனும் மெயின் பிக்சர் வந்துவிட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா என தங்களது காதலர்களை டேக் செய்து காதலர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். சிலர் ஜோடியாக வெளியே சென்று போட்டோ போட்டு சிங்கிள்களை வெறியேற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தினத்தில் சிங்கிள்களைப் பற்றி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

காதலைப் பற்றி சொன்னாலே அதில் தவறாமல் இடம்பெறுபவர்கள் கவிஞர்கள். அதிலும் திரையிசைப் பாடல்கள் எழுதுபவர்கள் குறித்து சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒரு கவிஞர் சினிமாவை ஆக்கிரமிப்பார். அந்த வகையில் இது ஒரு பொன்மலையில் தொடங்கி நிகழ்காலம் வரை காதலுக்காகப் பல பாடல்களை அருளியவர் கவிஞர் வைரமுத்து. காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கவிதையை ட்விட்டரில் எழுதியிருக்கிறார். அந்த ட்வீட்டில், “ஆண்டில் ஒருநாள் காதலை மதிப்பது மேனாட்டார் பழக்கம்.
வாழ்வே காதலாய் வாழ்ந்து கழிவதே நம்நாட்டார் வழக்கம். காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு?” என்று எழுதப்பட்டுள்ளது.

அதாவது, காதலர் தினத்தன்று மட்டுமே வெளிநாட்டவர்கள் காதலைக் கொண்டாடுவார்கள். ஆனால் நம்முடைய நாட்டில் வாழ்க்கையே காதலோடு இயைந்து தான் இருக்கிறது. அதனலா காதல் இல்லாத நாளே நம் நாட்டில் கிடையாது. எல்லா நாளும் காதல் தான் என்று கவிஞர் கூறியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment