இலங்கையில் தற்போது காலை வேளையில் நிலவும் அதிகூடுதலான குளிர் நிலைமை இந்த மாதம் இறுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையே இதற்கு காரணம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படிஇ மத்தியஇ சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளைஇ கிழக்குஇ ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.