பிரித்தானியாவில் 5 மணி நேரத்தில் பதற வைத்த 9 சம்பவம்: மர்ம நபரை தேடும் பொலிஸ்

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் ஐந்து மணி நேரத்தில் ஒன்பது பாலியல் தாக்குதல்கள் முன்னெடுத்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்வான்சீ அருகே சிங்கிள்டன் பார்க்கிலேயே நேற்று பகல் 8 மணி முதல் மதியம் 1 மணி வரை குறித்த பாலியல் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

தலையில் முக்காடு போன்ற உடை அணிந்த ஒரு சைக்கிள் ஓட்டுநரே இந்த 9 தாக்குதல்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இப்பகுதியில் நடந்த மொத்தம் ஒன்பது சம்பவங்களும் தொடர்புபட்டுள்ளதாகவும் சவுத் வேல்ஸ் பொலிசார் நம்புகின்றனர்.

ஊரடங்கின் போது குறித்த பூங்காவை தவறாமல் பயன்படுத்தும் உள்ளூர்வாசிகளுக்கு இந்த சம்பவங்கள் கவலையளிப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என தெரிவித்துள்ள விசாரணை அதிகாரி பீட்டர் காலின்ஸ்,

இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறோம், எங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பூங்காவிலும் அதைச் சுற்றியும் கூடுதல் ரோந்துப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மட்டுமின்றி இந்த பாலியல் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் பகல் 8 மணி தொடக்கம் 1 மணி வரை, அந்த பூங்காவை பயன்படுத்திய எவரேனும், இந்த விவகாரம் தொடர்பில் சாட்சியம் அளிக்க முன்வந்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment