ரத்தன் டாடா உள்ளேயும் ஒரு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை… ரத்தன் டாடாவே சொன்ன தனது காதல் கதை

by Lifestyle Editor
0 comment

தனக்கும் காதல் வந்தது ஆனால் அது இந்தியா-சீனா யுத்தம் காரணமாக முறிந்து போனதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் நாவல் டாடா என்ற ரத்தன் டாடாவை நம் நாட்டில் அறியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. மிகப்பெரிய தொழிலதிபர், சிறந்த கொடை வள்ளல் என பல முகங்களை கொண்ட ரத்தன் டாடா இன்று வரை பேச்சலர்தான். ஆனால் அவர் உள்ளேயும் ஒரு அழகிய காதல் இருந்துள்ளது. அந்த தகவலை ரத்தன் டாடாவே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, ஹூமன்ஸ் ஆஃப் பம்பாய் என்ற பிரபலமான பேஸ்புக் பக்கத்தில் ரத்தன் கலந்துரையாடினார்.

அப்போது, ரத்தன் டாடா தனது குழந்தை பருவம், காதல் வாழ்க்கை குறித்து பேசினார். தனது காதல் குறித்து ரத்தன் டாடா கூறியதாவது: கல்லூரி படிப்பை முடித்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். இது ஒரு சிறந்த நேரம், சூழ்நிலை அழகாக இருந்தது. எனக்கு சொந்தமாக கார் இருந்தது. எனது வேலையை நேசித்தேன்.

அந்த நகரில்தான் நான் ஒரு பெண்ணை காதலித்து கிட்டத்தட்ட திருமணம் செய்து கொண்டேன். அதேசமயம் சுமார் 7 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாத பாட்டியிடமிருந்து விலகி இருந்ததால் குறைந்தபட்சம் தற்காலிகமாக திரும்பி செல்ல முடிவு எடுத்தேன். எனவே நான் என் பாட்டியை பார்க்க திரும்பி வந்தேன். நான் காதலித்த பெண் என்னனுடன் இந்தியாவுக்கு வருவார் என்று நினைத்தேன். ஆனால் 1962 இந்தியா-சீனா யுத்தம் காரணமாக அவளுடைய பெற்றோருக்கு சம்மதம் இல்லை. இதனால் அந்த காதல் முறிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment