1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது. தண்ணீா் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. இந்தப் பாலம், மலையின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீரை விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளின் பாசனத் தேவைக்காகக் கொண்டு செல்கிறது. இந்தப் பாலத்தை பார்வையிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்து உள்ளது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன.நேரம் – காலை 6.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை.
மாத்தூா் தொட்டிப்பாலம்
previous post