ஜியோ பயனர்களுக்கு ஜாக்பாட்!

by Lifestyle Editor
0 comment

ஜியோ பயனர்கள் அனைவரும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அண்மையில்கூட அனைத்து அழைப்புகளும் இலவசம் என ஜியோ நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் முழுவதையும் இலவசமாக பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஜியோ டிவி செயலியை பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும். இந்த செயலியின் மூலம் நேரலை போட்டிகள் மட்டுமின்றி, ஹைலைட்டுகளையும் பார்க்க முடியும். இதற்காக தனிப்பட்ட கட்டணமோ சந்தாவோ செலுத்த தேவை இல்லை என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment