முதல்முறையாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை குழந்தைகள் மீது செலுத்தி ஆய்வு!

by Lifestyle Editor
0 comment

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதன்முறையாக குழந்தைகளுக்கு அஸ்ட்ராஜெனேகா COVID-19 தடுப்பூசியை செலுத்தி ஆய்வு செய்யவுள்ளதாக்க அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி அடுத்தக்கட்ட முக்கிய ஆய்வைத் தொடங்கியுள்ளது.

இந்த தடுப்புமருத்து குழைந்தைகளுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது என்பதை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

6 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி பயனுள்ளதா என்பதை புதிய நடு நிலை சோதனை தீர்மானிக்கும் என்று பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 தன்னார்வலர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இந்த மாதத்தில் முதல் டோஸ் செலுத்தப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது.

உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள டபுள் டோஸ் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி, மற்ற தடுப்பூசிகளை விட மலிவானது மற்றும் விநியோகிக்க எளிதானது என கூறப்படுகிறது.

அஸ்ட்ராஜெனேகா இந்த ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும் இலக்கைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment