தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தான் மீடூ பிரச்சினைக்கு ஆளாகியுள்ளதாக சமீபத்தில் மிகவும் வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தனர்.
இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா பகீர் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது வாழ்க்கை கதையை, அன்பினிஸ்டு மெமோயார் என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார்.
View this post on Instagram
அந்த புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் குறித்து எழுதியுள்ள அவர், இயக்குநர் ஒருவர் தனது மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் எனக் கூறியது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சல்மான் கான் படமொன்றில் பாடலுக்கு நடனமாடியபோது, ஆடைகள் ஒவ்வொன்றையும் கழட்ட வேண்டும் என்றும், உள்ளாடைகள் தெரியும் அளவிற்கு அந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்றும் இயக்குநர் வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram