பிரான்சில் தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர்கள் பலருக்கு பக்க விளைவுகள்

by Lifestyle Editor
0 comment

பிரான்சில் ஆஸ்ட்ராசெனகா மற்றும் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பல செவிலியர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் தலைவலி என ப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர்களில் 1.49 சதவிகிதம், அதாவது 149 செவிலியர்களுக்கு ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரனை நடத்திவருகிறார்கள். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 73 பேருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலும் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Related Posts

Leave a Comment