கொரோனா வைரஸ் குறித்து பிரித்தானியா வெளியிட்ட முக்கிய தகவல்

by Lifestyle Editor
0 comment

உலகையே குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பிரித்தானியா சுகாதார செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டள்ளார்.

முதலில் தோன்றிய கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உருமாறிய கொரோனாக்கள் பரவி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தடையாக உள்ளன.

இந்நிலையில், தடுப்பூசி மற்றும் புதிய சிகிச்சை முறைகளின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா சிகிச்சையளிக்கக்கூடிய நோயாகும் என பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் போல் நாம் வாழ பழகிக்கொண்ட மற்றொரு நோயாக கொரோனா மாறும்.

கொரோனா காய்ச்சல் போல மாறிய பின் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் மூலம் கொரோனாவின் தீவிரத்தை குறைக்கலாம் என மாட் ஹான்காக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment