‘பச்சிளங் குழந்தையை கொன்ற குரங்கு’ : இரட்டை பெண் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

by Lifestyle Editor
0 comment

தஞ்சை அருகே பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை குரங்கு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்தன. தஞ்சை பெரிய கோவிலின் அகழியானது ராஜா இல்லத்தில் அருகே உள்ளது. அங்கு நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தைகளின் தாயார் வீட்டுக்குள் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு வெளியே அமர்ந்திருந்துள்ளார். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய குரங்கு, ஒரு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது. மறு குழந்தையை தூக்க வரும் போது அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் சிறிது தூரம் ஒரு குழந்தையை தூக்கிச் சென்று விட்டு அகழியில் போட்டுள்ளது.

குழந்தையை உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment