‘ஆன்லைன் ரம்மி விளையாட’ செயின் பறிப்பு

by Lifestyle Editor
0 comment

கருங்கல் அருகே ரம்மி விளையாடுவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயரை கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியதால், கொள்ளையர்களை பிடிக்க கருங்கல் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன் படி, போலீசார் ரகசியமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஜஸ்டின்ராஜ் (21) என்ற இளைஞரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் கூடைப்பந்து விளையாட்டு வீரர் என கூறியிருக்கிறார்.

ஜஸ்டின்ராஜ் ஆன்லைன் ரம்மியில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்றும் முதலில் அதில் பணத்தை ஈட்டிய அவர் ரம்மிக்கு அடிமையானதும் பின்னர் ரூ.2 1/2 லட்சம் வரை பணத்தை இழந்ததும் அதை மறைக்க வீட்டில் இருந்து பொருட்களை திருடி விற்றதும் போலீசாருக்கு தெரிய வந்தது. வீட்டில் திருடியதால் உறவினர்கள் அவரை திட்டிய நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு தேவையான பணத்தை செயின் பறிப்பில் மூலம் சேகரிக்க தொடங்கியிருக்கிறார் ஜஸ்டின்ராஜ்.

இதையறிந்த போலீசார் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டதாரி இளைஞர் ஆன்லைனில் ரம்மி விளையாட செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment