தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

by Lankan Editor
0 comment

மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) குறித்த நிலநடுக்கம் 6.3 ரிக்டெர் அளவில் உணரப்பட்டுள்ளது.

இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இதுவரை எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு பொதுவெளியில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related Posts

Leave a Comment