இன்று தை கடைசி வெள்ளி… அம்மனை வழிபட உகந்த நாள்!

by News Editor
0 comment

தை மாதம் வெள்ளிக் கிழமைகள் எல்லாமே அம்மனை வழிபட மிகவும் உகந்த நாட்கள். தை மாதத்தின் கடைசி நாளான இன்று அம்மனை வழிபட்டு நலன்களைப் பெறுவோம்.

அம்மனுக்கு ஆடி மாதம் சிறந்தது என்று நாம் கொண்டாடுகிறோம். ஆடி மாதம் மட்டுமல்ல தையும் மிகவும் சிறந்ததுதான். தை வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் குடும்பம் தழைக்கும். அம்மனுக்கு சந்தனக் காப்பு செய்து வழிபட்டால் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்குவாள் அம்பாள்.

தை வெள்ளிக் கிழமைகளில் ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்கு சென்று, அல்லது அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நம்மை பிடித்துள்ள தோஷம் நீங்கும். வீட்டில் நல்ல விசேஷம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். ஆடி மற்றும் தை மாதங்களில் வரக்கூடிய வெள்ளிக் கிழமைகள் தெற்கு மற்றும் வடக்கு நோக்கி அமர்ந்த அம்மனை வழிபட்டு வருவது சிறப்பாக இருக்கும்.

தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அம்மனை வழிபட்டால் செல்வ நிலை உயரும். வெற்றி கிட்டும். வடக்கு நோக்கி அமர்ந்த அம்மனை வழிபட்டால் இன்னல்கள் நீங்கும், வாழ்வில் இனிய திருப்பங்கள் நிகழும்.

திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பும் இளம் பெண்கள், குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கும் பெண்கள், சுமங்கலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று நினைக்கும் இல்லத்தரசிகள் இன்றைய தினத்தில் விரதம் இருந்து இன்றைய வழிபாட்டில் பங்கேற்றால் நினைத்தது நடக்கும்.

உள்ளத்தில், இல்லத்தில் நல்லவை நடக்க, தீயவை விலக இன்றைய நாளில் அம்மனை வழிபடுவோம். அம்மன் அருள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும்!

Related Posts

Leave a Comment