தற்கொலை பண்ணிக்குவேன்! இது மிகவும் கீழ்த்தரமானது! சூப்பர் சிங்கர் புகழ் தம்பதிகள் செந்தில் – ராஜலட்சுமி மீது பெண் கண்ணீர் புகார்

by News Editor
0 comment

தன்னுடைய பாடலை வேறு ஒருவர் இயற்றியதாக பொது வெளியில் செந்தில் – ராஜலட்சுமி கூறியது தொடர்பாக நாட்டுபுறப்பாடகி மதுரமல்லி கண்ணீர் மல்க பொலிசில் புகார் அளித்துள்ளார்.

மதுரமல்லி என்ற புனைப் பெயரில் பாடல்களை இயற்றி பாடிவரும் டாக்டர் கலைச்செல்வியின் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற வீடியோ பாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமியின் கிராமிய பாடல்களை விஞ்சும் அளவிற்கு யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழா மேடைக்கச்சேரி ஒன்றில், மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடலை தனது தங்கை என்று கூட்டத்தினரால் அழைக்கப்படும் கலைவாணி என்பவர் இயற்றி பாடியதாக ராஜலட்சுமி பேசினார்.

அந்தபாடலை இயற்றி பாடியதற்கு ஆதாரமாக யூடியூப்பில் இன்றளவும் அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், ராஜலட்சுமி யாரோ ஒரு பெண்ணை வைத்து அந்த பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவது கீழ்த்தரமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் மதுர மல்லி.

ராஜலட்சுமி தவறான கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிற அளவுக்கு பாடகி மதுர மல்லி கடுமையான மன உளைச்சலுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

செந்தில் ராஜலட்சுமி தம்பதி தன்னுடைய பாடலை திருடியதற்கு மன்னிப்பு கேட்பார்கள், நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் புகார் அளித்து விட்டு கண்ணீர் மல்க மதுர மல்லி காத்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment