பிரித்தானியா விமான நிலையங்கள், துறைமுகங்களில் குவியும் பொலிஸ்! ஏதற்காக? உள்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு

by News Editor
0 comment

பிரித்தானியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பொலிஸார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரித்தி பட்டேல் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிகள் அமுலுக்கு வரவுள்ள நிலையில், அவர்களை கண்காணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தி பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை முதல், 33 சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வரும் பிரித்தானியா குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்த தவறினால் 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் மற்றும் தவறான தகவல் அளிக்கும் பயணிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பிரித்தானியா வந்ததற்கான காரணம் மற்றும் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவப்பு-பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விதிகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்த உதவும் பொலிஸார் குவிக்கப்படுவார்கள் என பிரித்தி பட்டேல் கூறியுள்ளார்.

கொரோனா விதிகளை அமுல்படுத்த ஆகும் கூடுதல் செலவுகளை சமாளிக்க பொலிஸ் படைக்கு 60 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கப்படும் என உள்துறை செயலாளர் பிரித்தி பட்டேல் உறுதியளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment