அமெரிக்காவில் டெக்சாசில் பாரிய வாகன விபத்தில், 5பேர் உயிரிழப்பு, 35பேர் காயம்

by Lankan Editor
0 comment

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரதானசாலை ஒன்றில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த கோர விபத்தில் சிக்கி 35 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

ஃபோர்ட் வொர்த் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது, பெரும்பாலான சாரதிகளை, அவர்களின் வாகனத்தை பிளந்து மீட்கும் நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய பெரும்பாலான வாகனங்கள், கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கார்கள் மற்றும் லொரிகளுக்குள் யாரும் இன்னும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுமார் 35 பேர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, 5 சாரதிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பொலிசாரும் மீட்பு குழுவினரும் தொடர்ந்து சம்பவப்பகுதியில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

பனி மூடிய சாலையில், கட்டுப்பாட்டை இழந்த சாரதிகள் தங்கள் வாகனங்களை ஒன்றோடொன்று மோதியுள்ளனர். மட்டுமின்றி இரவு கடுமையான பனிப்பொழிவும் இருந்துள்ளது.

Related Posts

Leave a Comment