பிரபல சீரியல் வில்லிக்கு இப்படியொரு பிரச்சனையா? பொலிசில் பரபரப்பு புகார்

by News Editor
0 comment

பிரபல சீரியலான ரோஜாவில் வில்லியாக நடிக்கும் ஷாமிலி சுகுமார் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி, இளைஞர் ஒருவர் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு பரப்பி வருவதாக பிரபல சின்னத்திரை நடிகை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

பொதுவாக சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமின்றி ரசிகர்களை அதிகமாகவும் கவர்ந்துள்ளது.

அவ்வாறு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் வில்லியாக நடிப்பவர் அனு.

மேலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

மேலும் யூடியூபில் ஆக்டிவாக இருக்கும் அவர் லைப் ஸ்டைல் தொடர்பான ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷாமிலி சுகுமார் பெயரில் போலியான கணக்கு ஒன்று இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் ஷாமிலி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஷாமிலி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்ததைத் தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment