சீனாவில் பி.பி.சி ஒளிபரப்பு சேவைக்குத் தடை

by Lankan Editor
0 comment

சீனா பி.பி.சி உலக செய்திகளை தனது நாட்டில் ஒளிபரப்புவதற்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையிடல்கள் மற்றும் சிறுபான்மையினரான உய்குர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பான பி.பி.சி.யின் அறிக்கையிடல்கள் தொடர்பில் சீனா குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பி.பி.சியின் உரிமத்தை சீனாவின் சி.ஜி.டி.என் தொலைக்காட்சி நிறுவனம் இழக்கின்றது.

இந்நிலையில் சீனாவின் செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக பி.பி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் பயமின்றியும் பக்கசார்பின்றி செய்திகள் அறிக்கையிடப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் இந்த செயற்பாடு ஊடக சுதந்திரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததொரு விடயமென பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டொமினிக் ரெப் விமர்சித்துள்ளார். “ சீனாவின் நடவடிக்கை கருத்து ,ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது” எனவும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், அமெரிக்காவும் சீனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment