அழகுமிக்க கடற்கரைகள் – கன்னியாகுமரி

by Lifestyle Editor
0 comment

சொத்தவிளை கடற்கரை – மேற்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இது விடுமுறையை கழிக்க சிறந்த இடமாகும்.

முட்டம் கடற்கரை – கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் நாகா்கோவிலிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது ஒரு கம்பீரமான பாறைகள் நிறைந்த கடற்கரை ஆகும். இங்குள்ள பாறைகள் மேல் அலைகள் மோதி பனிபோல் சிதறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தேங்காய்பட்டினம் கடற்கரை – இந்த கடற்கரை விளவங்கோடு தாலுகாவிலுள்ள பைங்குளம் கிராமத்தில் மேற்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தெக்குறிச்சி கடற்கரை (30 கி.மீ.) – இது மேற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிறிய அழகிய அமைதியான கடற்கரை கிராமம் ஆகும்.

சங்குத்துறை கடற்கரை (15 கி.மீ.) – இதுவும் மேற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அழகிய கடற்கரை ஆகும்.

Related Posts

Leave a Comment