அமெரிக்காவில் புறப்பட ஓடுபாதையை நோக்கி சென்ற விமானம் சறுக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
Pittsburgh சர்வதேச விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் 77 பேருடன் அட்லாண்டா புறப்பட தயாராகி ஓடுபாதையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
இதன்போது சாலையிலிருந்து சறுக்கி விமானம் விபத்துக்குள்ளானது. கடும் பனிபொழிவு காரணமாக விமானம் சறுக்கியதாக கூறப்படுகிறது.
இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Breaking Aviation News & Videos (@breakingavnews) February 11, 2021
விமானத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் விமான நிலைய முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், இந்தவிபத்தால் விமான நிலைய நடவடிக்கைகளில் எந்த தடையும் ஏற்படவில்லை என Pittsburgh சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.