எனக்கு உதவுங்கள் என கண்ணீர் விட்ட பெண்… வாரி வழங்கிய மக்கள்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியாவில், தனக்கு புற்றுநோய் என்று கூறி பொதுமக்களிடம் உதவி கோரிய ஒரு பெண்ணுக்கு, 52,000 பவுண்டுகள் வாரி வழங்கினார்கள் மக்கள்.

கென்டைச் சேர்ந்த Nicole Elkabbas (42), தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் என்று கூறி உதவி கோரியபோது, வாரி வழங்கினார்கள் மக்கள்.

ஆனால், உண்மையில் Nicoleக்கு புற்றுநோயே இல்லை என்பதும், அவர் சூதாட்டத்துக்கு அடிமை என்பதும், ஒரே வருடத்தில் சூதட்டத்திற்காக 60,000 பவுண்டுகள் செலவிட்டதும் தெரியவந்தது.

சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்ககாவும், உல்லாசமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காகவும், ஆடம்பரமான இடத்தில் அமர்ந்து கால்பந்தாட்ட போட்டிகளை ரசிப்பதற்காகவும் பொதுமக்கள் தானமாக வழங்கிய பணத்தை Nicole செலவு செய்ததும் தெரியவந்தது.

அறுவை சிகிச்சை ஒன்றிற்காக எடுத்த புகைப்படத்தை Nicole பண உதவி கோருவதற்காக பயன்படுத்தியதை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், அது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அதன் பிறகே Nicole செய்த மோசடி வெளியாகியிருக்கிறது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள Nicoleக்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது புற்றுநோயுடன் போராடுவர்களை அவமதிக்கும் ஒரு செயல் என Nicoleஐ கடுமையாக விமர்சித்துள்ளார் தீர்ப்பளித்த நீதிபதி.

அத்துடன், தனது நெருங்கிய தோழியை புற்றுநோய்க்கு பறிகொடுத்த Michal Booker என்ற பெண்மணி, Nicole தனக்கு புற்றுநோய் என்றதும் 6,000 பவுண்டுகளை அள்ளிக்கொடுத்திருக்கிறார்.

இப்போது Nicole தன்னை ஏமாற்றியது தெரிந்ததும் அவமானமாக உணர்வதாக தெரிவித்துள்ள Michal, இனி யார் வந்து என்னிடம் உதவி கேட்டாலும் அவர்களை சந்தேகமாகத்தான் பார்ப்பேன்.

முன் பின் தெரியாத ஒருவருக்கு இனி என்னால் உதவமுடியுமா என்பது சந்தேகமே என்கிறார்.

Related Posts

Leave a Comment