ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வந்த பரியேறும் பெருமாள் நடிகருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் வீடு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் சூப்பரான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் ஹீரோ கதிரின் தந்தையாக நடித்திருப்பவர் தங்கராசு, தெருக்கூத்து கலைஞர்.
அதன்பின்னர் எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை, வயதாகிவிட்டதால் தெருக்கூத்துகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவரது மகள்கள் உறவினர் வீட்டில் தங்கிவிட, பிழைப்புக்காக கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார்.
முன்பு ஒரு வேளை உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது வேலையும் இல்லாததால் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகிறார் தங்கராசு.
இவரது கஷ்டம் குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியானதும் வைரலானது, உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து வீட்டை சரிசெய்து, ஒரு மகளுக்கு தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதி அளித்ததாக தெரிகிறது.
இதன்படி தற்போது குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார் கலெக்டர். அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை வழங்கியுள்ளார்.
இதுகுறித்த பணி ஆணையை அவர் கொடுக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.