ஒரு மாதத்துக்கும் மேலாக எலிக்கறி சாப்பிட்டு உயிர்வாழ்ந்த மூவர் மீட்பு

by Lifestyle Editor
0 comment

சுமார் ஐந்து வாரங்களாக பாலைவனத் தீவில் சிக்கித் தவித்துவந்த 3 கியூபா நாட்டவர்களை அமெரிக்க கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

கடந்த மாதம் கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் ஒரு தனிப் படகில் பஹாமாஸ் பகுதியில் பயணித்துள்ளனர்.

எதிர்பாராத விதாமாக அந்த படகு கடலில் கவிழ்ந்துவிட, Anguilla Cay எனும் ஒரு ஆளற்ற பாலைவனத் தீவில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

அவர்கள் அங்கு உயிர் பிழைக்க தேங்காய்கள், எலிக்கறி, சங்குக்கறி என கிடைத்தவற்றை உண்டு வந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 9) அமெரிக்க கடலோரக் காவல்படை, பஹாமாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது Anguilla Cay எனும் தீவிலிருந்து யாரோ கொடியசைத்தது சமிக்ஞை கொடுத்ததைக்க கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அப்பகுதியில் நெருக்கமாக சென்று பார்த்த போது, 3 பேர் அந்த தீவில் ஒரு மாதமாக மாட்டிக்கொண்டுள்ளனர் என்பது தெரிவந்தது.

உடனடியாக ஒரு குழுவை ஹெலிகாப்டரில் அனுப்பி அவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் தொடர்பு கொள்ள ரேடியோ கொடுக்கப்பட்டது.

மறுநாள் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருதத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்ததையடுத்து, அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment