“கவலைப்படாதேம்மா உனக்கு நான் குழந்தை கொடுக்கிறேன்” -ஒரு டாக்டர் பண்ண வேலைய பாருங்க.

by Lifestyle Editor
0 comment

குழந்தையில்லா தம்பதிகளிடம் ஐந்து லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு குழந்தையை விற்ற டாக்டரை போலீசார் கைது செய்தார்கள்.

மகாராஷ்டிராவின் மும்பை விரார் பகுதியில் நலசோபராவில் உள்ள நைல்மோர் நகரில் வசிக்கும் ஜிதன் பாலா என்ற 48 வயதான மருத்துவர், ஒரு மகப்பேறு க்ளினிக் நடத்தி வருகிறார் .இவரின் கிளினிக்கில் ஏராளமான பெண்கள் குழந்தை பெற்று செல்கிறார்கள் .இந்நிலையில் அந்த டாக்டரிடம் 50 வயது அனிதா பாவே என்ற பெண்தரகர் ஒரு குழந்தையில்லா தம்பதியை கூட்டி வந்தார் .

நாரங்கி கிராமத்தில் வசிக்கும் சோன்ஜித் மொண்டல் (40), மஞ்சு (37) என்ற அந்த தம்பதியினர், தாங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் ,ஒரு குழந்தை மட்டும் தாங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டுமென்று அந்த டாக்டரிடம் கேட்டார்கள் .அதனால் அந்த டாக்டர் அந்த தம்பதியிடம் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு குழந்தையை தருவதாக வாக்குறுதி தந்தார் .அதன் படி அந்த டாக்டர் அந்த தம்பதிகளிடம் ஐந்து லட்ச ருபாய் பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த வாரம் ஒரு பெண் குழந்தையை கொடுத்தார் .அதன் பிறகு இந்த குழந்தை கடத்தல் விவகாரம் போலீசுக்கு தெரிந்து விட்டது .அதனால் போலீசார் அந்த குழந்தையை விற்ற டாக்ட்டரையும் ,அந்த பெண் தரகர் அனிதா பாவே மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய அந்த தம்பதிகளையும் கைது செய்தார்கள் .பின்னர் அவர்களை பிப்ரவரி 16, ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க இருக்கிறார்கள் .அதன் பிறகு அந்த குழந்தை யாரிடமிருந்தாவது கடத்தப்ட்டதா அல்லது குழந்தையின் பெற்றோரே பணம் வாங்கிண்டு விற்று விட்டார்களா என்பது தெரிய வருமென்று போலிஸார் கூறினார்கள்

Related Posts

Leave a Comment