தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

by Lifestyle Editor
0 comment

ராமநாதபுரம்

தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தை, ஆடி மற்றும் மஹாளய அமாவாசை தினத்தின்போது, பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி மற்றும் மகாளய அமாவாசையின்போது கடலில் நீராட அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில், அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடுவதற்கான தடையை சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டிருந்தது. அதேபோல், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களில் நீராடவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தை அமாவாசை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் அதிகாலை முதலே குடும்பத்துடன் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு சென்றனர். தை அமாவாசையை ஒட்டி தர்ப்பணம் கொடுக்கவும், சுவாமியை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் ராமேஸ்வரம் கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Related Posts

Leave a Comment