கல்விக்கடனும் தள்ளுபடியா? – மாணவர்களின் கேள்வியும்… முதல்வரின் பதிலும்!

by Lifestyle Editor
0 comment

முதல்வர் பதவியைத் தக்கவைக்க தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டுகளில் செய்த நலத்திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்துவருகிறார். தற்போது ஐந்தாம் கட்ட பரப்புரையில் அவர் இருக்கிறார். இன்று திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் குழுமியிருந்த கல்லூரி மாணவர்கள், தங்களின் கல்விக்கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதைக் கவனித்துப் பின் அவர்களிடம் பேசிய முதல்வர், “மாணவர்களின் எதிர்காலம் தான் நாட்டின் எதிர்காலம். ஆகவே மாணவர்களின் கோரிக்கையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதுபோன்று முதல்வர் பிரச்சாரம் செல்லுமிடங்களிலெல்லாம் இளைஞர்கள் அவரிடம் ஏதொவொரு கோரிக்கையை வைக்கின்றனர். சமீபத்தில் கூட இளைஞர்கள் அவரிடம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தின்போது லாக்டவுன் போடுமாறு விளையாட்டாகக் கூறினர்.

சில தினங்களுக்கு முன் விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார் முதல்வர். சசிகலா வருகைக்குப் பின் தன்னுடைய இமேஜை உயர்த்தவே இதைச் செய்தததாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஏற்கனவே ஆல் பாஸ், கல்லூரிகளுக்கு லீவ், தினமும் 2 ஜிபி டேட்டா என முதல்தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்தார். அந்த வரிசையில் கல்விக்கடன் தள்ளுபடியும் இணையலாம் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment