பிரித்தானியாவில் தோன்றிய கொரோனா உலகையே உலுக்கப் போகிறது! உலக நாடுகளுக்கு முன்னணி விஞ்ஞானி எச்சரிக்கை

by News Editor
0 comment

பிரித்தானியா பிராந்தியமான கென்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு உலகம் முழுவதும் பரவக்கூடும் என இங்கிலாந்தின் மரபணு கண்காணிப்பு திட்டத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா மாறுபாடு நாடு முழுவதும் பரவிவிட்டது, எல்லா சாத்தியக்கூறுகளிலின் படி இது உலகம் முழுவதும் பரவுப் போகிறது என கொரோனா Genomics UK கூட்டமைப்பின் இயக்குனர் Sharon Peacock தெரிவித்துள்ளார்.

நாம் வைரஸை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவுடன் அல்லது அது வைரஸாக இருந்து நோயை உண்டாக்கும் தன்மையிலிருந்து மாறிய பின்னர், அதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தலாம்.

ஆனால் எதிர்காலத்தில் நாம் பல ஆண்டுகளாக இதை எதிர்கொள்ள போகிறோம். என் பார்வையில், நாம் இன்னும் 10 வருடங்கள் இதற்கு எதிராக போராடப் போகிறோம் என Sharon Peacock எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment