அனிருத்தை காதலிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்.. நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை!

by News Editor
0 comment

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனிருத்துக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நெருக்கமாக இருக்கும் 2 புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

தற்போது அந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வைரலாக்கி, இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரப்பி வருகிறார்கள்.

மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பேசுகிறார்கள்.

ஆனால், இதனை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. இருவரும் நண்பர்கள்தான். காதல் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மறுத்தார்கள்.


ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment