பிரித்தானிய இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

by Lankan Editor
0 comment

பிரித்தானி இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். எனினும் இளவரசருக்கு எந்த கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இளவரசர் சார்லஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஒரு வாரத்திற்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்.

முன்னதாக 94 வயதான எலிசபெத் மகாராணிக்கும் 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பிரித்தானியாவில் இதுவரை 1 கோடியே 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும்இ 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment