80 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

by Lankan Editor
0 comment

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு கடத்தப்பட்ட போதைப்பொருளே இவ்வாறு கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குளிர்பானம் தயாரிக்கும் இயந்திரத்துடன் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்க தரப்பினரால் அந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் ‘குஷ்’ எனப்படும் வகையை சேர்ந்த போதைப்பொருள் என சுங்க திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

1200 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment