வடமாகாணத்தில் நேற்று 21பேருக்கு கொரொனோ வைரஸ் தொற்று

by Lankan Editor
0 comment

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதியானது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 776 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 21 பேருக்கு காெரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைத் துறை மாணவர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பதுளையிலிருந்து வருகை தந்து கல்வி பயின்றவர்.

அத்துடன், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. அவர் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் தானாக முன்வந்து பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கியவர்.

மன்னார் நானாட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் ஹற்றன் நஷனல் வங்கியின் நானாட்டான் கிளை உத்தியோகத்தர்கள்.

Related Posts

Leave a Comment