இருளை நீக்கும்… செல்வச் செழிப்பைத் தரும் பச்சை கற்பூரம்!

by Lifestyle Editor
0 comment

தீபாராதனை அல்லது ஆரத்தி காட்டுவது நம்முடைய வழிபாட்டில் முக்கியமானது. இது இருளை நீக்கி ஒளியை நமக்குத் தருவதுடன் கடவுளுடன் நாம் ஐக்கியமாவதன் அடையாளமாக இந்த தீப ஆராதனை விளங்குகிறது. தீபாராதனை என்றாலே கற்பூரம்தான். கோவில்களில் மட்டுமின்றி ஒவ்வொரு வீடுகளிலும் கற்பூர ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது.

பச்சை கற்பூரம் தெய்வீக தன்மை மட்டுமின்றி மருத்துவ குணமும் மிக்கது. பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது பல்வேறு நன்மைகளை நமக்கு அருளச் செய்கிறது.

கற்பூரத்துக்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. எனவே, ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை கட்டி குபேர மூலையில் வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் நிரந்தரமாக செல்வம் தங்கியிருக்கும்.

வீட்டில் பணத்தை வைக்கும் பெட்டி, பீரோவில் பச்சைக் கற்பூரத்தை ஒரு துணியில் கட்டிப் போட்டு வைத்தால் பணப் பிரச்னை வராது என்பது நம்பிக்கை. இப்படி செய்வதால் செல்வம் மேலும் மேலும் பெருகும். பீரோ, பெட்டி மட்டுமின்றி பர்சில் கூட கற்பூரத்தை வைத்துக்கொள்ளலாம்.

நம் வீட்டை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்து கெட்ட சக்தியையும் அழித்து, நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் பச்சை கற்பூரத்துக்கு உண்டு.

பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்து வந்தால் வீட்டில் நிம்மதி நிலைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நிம்மதியின்மை, அமைதியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்.

காலை நேரத்தில் பச்சைக் கற்பூரத்தை எரித்து பூஜை செய்வதன் மூலம் துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை சக்தி அழிக்கப்படும். மேலும் கற்பூரத்தின் வாசனை காற்றை சுத்தப்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் நாம் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும்.

பச்சைக் கற்பூரம் ஒரு சிறந்த கெட்ட நுண்ணுயிர் கொல்லியாகும். பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது. டைஃபாய்டு, அம்மை வந்தவர்களுக்கு பச்சை கற்பூர வாசதனையை காட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment