பாலம் இல்லாததால் ஓடையில் சடலத்தை எடுத்து செல்லும் கிராமமக்கள்!

by Lifestyle Editor
0 comment

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் அருகே பாலம் அமைக்கப்படாததால் கிராம மக்கள் கால்வாயில் சடலத்தை தூக்கிசெல்லும் அவலம் நீடித்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது, வடக்கு கைலாசபுரம் கிராமம். இங்கு கடந்த 10 ஆண்டு காலமாக 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம மாயனத்திற்கு செல்ல சாலை அமைக்கப்படாததால், சடலங்களை ஓடை நீரில் இறங்கி, வயல்வெளி வழியாக எடுத்துச்சென்று வருகின்றனர்.

மேலும், மயானத்திற்கு உரிய கட்டிடம் கட்டப்படாததால் திறந்த வெளியில் சடலத்தை வைத்து இறுதிச் சடங்குகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிராமத்தில் வயது முதிர்வால் இறந்த நபரின் சடலத்தை, கிராம மக்கள் ஓடையில் இறங்கிச்சென்று, மயானத்தில் தகனம் செய்தனர்.

இதுகுறித்து பேசிய கிராம மக்கள், பாலம் மற்றும் மயான மேடை அமைக்க வலியுறுத்தி பல வருடங்களாக அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். இதனால் கால்வாய் மற்றும் வயல்வெளியை கடந்து சடலத்தை எடுத்துச்செல்ல வேண்டிய அவலம் நீடிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Posts

Leave a Comment