முகம் பளிச்சென்று பிரகாசிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்தி பாருங்க!

by Lifestyle Editor
0 comment

பூமிக்கு அடியில் வளரும் வகையை சார்ந்த பீட்ரூட் ஆனது தன்னுள் பல்வேறு அற்புதங்களை அடக்கியது.

இதய நோய்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், செரிமான கோளாறு போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.

அதுமட்டுமின்றி இது சருமத்திற்கு பெரிதும் உதவுகின்றது.

பீட்ரூட்டில் விட்டமின் சி இருப்பதால் முகத்தில் தூசு, தேவையற்ற இறந்த செல்களை நீக்க உதவும். கருவளையங்கள், கரும்புள்ளிகள் மறையும்.

அந்தவகையில் தற்போது இதனை கொண்டு எப்படி முகத்தை பளிச்சென்று மாற்றம் என பார்ப்போம்.

தேவையானவை
  • பீட்ரூட்
  • தயிர்
  • கடலை மாவு
  • எலுமிச்சை சாறு
எப்படி செய்வது?
  • பீட்ரூட்டை அரைத்து அதன் சாறை எடுத்துக்கொல்ளுங்கள். அதில் தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
  • மாஸ்க் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளுங்கள். நன்கு துடைத்துவிட்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
  • 20 முதல் 25 நிமிடங்கள் ஊற வையுங்கள். நன்கு காய்ந்ததும் முகத்தில் தண்ணீர் தெளித்து வட்டப்பாதையில் தேய்த்து மசாஜ் செய்து பேக்கை கழுவுங்கள்.
  • வெதுவெதுப்பான நீர் பயன்படுத்துங்கள். இறுதியாக முகத்தில் ஈரப்பதம் இருக்க மாய்சரைஸர் அப்ளை செய்யுங்கள்.
  • இப்படி வாரம் இரண்டு முறை இந்த பீட்ரூட் மாஸ்க் அப்ளை செய்யுங்கள்.

Related Posts

Leave a Comment