பேராண்டிகளா! இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

by News Editor
0 comment

பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகிறது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.

தொலைக்காட்சிகளில் தோன்றி இளைஞர்களுக்கான பாலியல் சந்தேகங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்து பிரபலமானவர் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ்.

இவர் பதிலளிக்கும் போது இளைஞர்களைக் குறிப்பிட்டு பேராண்டிகளா என அழைப்பது இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலமானார். அவரது உடல் சேலம் மாவட்டத்திலுள்ள பூர்வீக இடமான சிவதாபுரத்தில் உள்ள அகஸ்தியர் மாளிகையில் இறுதி சடங்குகளுக்காகவும் , பொது மக்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment