மறைந்த சித்ராவிற்கு குடும்பத்தினர் செய்த காரியம்…. இன்றுடன் இத்தனை நாட்கள் ஆகிவிட்டதா?

by News Editor
0 comment

பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9ம் திகதி நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணத்திற்கு காரணம் என்று பல தகவல்கள் வெளியாகியிருந்தாலும், உண்மை இன்னும் வெளிச்சத்திற்கு வராமலே இருந்து வருகின்றது.

சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்ததையடுத்து, அவர் அளித்த தகவலின் பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்து சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது.

நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார்.

ஆனால், அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அதன் மீனாட்சி தொடரில் நடித்தார்.

இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இப்படி ஒரு நிலையில் சித்ரா இறந்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அவரது குடும்பத்தினர் சித்ராவின் உருவப் படத்தை வைத்து வழிபட்டு இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment