இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

by Lankan Editor
0 comment

இலங்கையில், அடுத்த மாதளவில் நாட்டின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு அஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் ஊடாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஊடகவியலாளர்களுக்கும் கொவிஷீல்ட் அஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் .

Related Posts

Leave a Comment