பெண்கள் ஷாப்பிங் செய்யும் போது பணத்தை வீணாக்காமல் இருக்க சில வழிமுறைகள்

by Lifestyle Editor
0 comment

ஷாப்பிங் செய்யும் போது பணத்தை வீணாக்காமல் இருக்க சில வழிமுறைகளை உங்களுக்காக

* உங்களுக்கு தேவையில்லாத ஒன்றை நீங்கள் வாங்கபோகிறீர்கள் என்றால் ஒருநாள் காத்திருந்து அடுத்த நாள் அதை வாங்குவதை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று பாருங்கள். தேவை இருந்தால் வாங்குங்கள். இல்லையெனில் தவிர்த்து விடுங்கள்.

* நீங்கள் பணத்தை சேமிக்க அல்லது கடனை அடைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் நீங்கள் விரும்பும் தேவையற்ற விஷயங்களை தவிர்த்து உங்களுக்கு தேவையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம் நிறைய சேமிக்க முடியும்.

* தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்று அதிக அளவில் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதால் பணம் விரயம் ஆகும்.

* முடிந்தவரை உணவு உண்ட பின்பு ஷாப்பிங் செய்யுங்கள்.

* பசியோடு ஷாப்பிங் செய்யும் போது நம்மை மீறி தேவையற்ற பொருட்களை வாங்குவதாக பல ஆய்வுககள் தெரிவிக்கின்றன.

* வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நீங்கள் வாங்க வேண்டியவற்றின் பாட்டியலை உருவாக்குங்கள். பட்டியலில் இல்லாத எதையும் வாங்கக்கூடாது என்று உறுதியாக இருங்கள்.

* மாலுக்கு அல்லது மளிகை கடைக்கு செல்லும் போது உங்களுக்கு தேவைப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் பணத்தை மட்டுமே எடுத்து கொண்டு கிரெடிட் கார்டுகளை வீட்டிலேயே விட்டு விடுங்கள்.

Related Posts

Leave a Comment