முன்னாள் அதிமுக கவுன்சிலர் அரிவாள் வெட்டு

by Lifestyle Editor
0 comment

அம்பத்தூர் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் வசித்து வருபவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மூர்த்தி. இவர் வில்லிவாக்கம் மேற்கு ஒன்றிய துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று மாலை மூர்த்தியின் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல வந்த நபர் ஒருவர், வீட்டுக்குள் செல்லாமல் மூர்த்தியை வெளியே அழைத்து சென்றிருக்கிறார். பக்கத்து தெருவில் அவர்கள் நடந்து சென்ற போது மறைந்திருந்த கும்பல் ஒன்று மூர்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளது.

தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதை தெரிந்து கொண்ட மூர்த்தி, அரிவாளை பிடுங்கி அவர்களை வெட்டியுள்ளார். இவை அனைத்தும் அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மூர்த்தியை மீட்ட பொதுமக்கள், அவரை அப்பலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூர்த்தியை காப்பாற்ற முயன்ற ஒருவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை பதைபதைக்கச் செய்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், விஜயசேகர், ராஜு, முத்து ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த கும்பல் மூர்த்தியை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.

Related Posts

Leave a Comment