பிக்பாஸ் பிரபலமான ரியோ தனது திருமண நாளை த்ரில்லிங்காய் கொண்டாடி வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக இருந்தவர் ரியோ ராஜ். தொடர்ந்து சீரியல்களில் நடித்த ரியோ சினிமாவிலும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரியோ.
இதில் குரூப்பிஸம் இல்லை இல்லை என்று கூறிவிட்டு அன்பு கேங்கில் ஐக்கியமானார் ரியோ. இந்நிலையில் பிக்பாஸ் முடிந்ததும் காட்டுக்கு போகப் போவதாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறினார். இதனால் கமல் அவருக்கு டென்ட்டை பரிசாக கொடுத்தார். சொன்னது போலவே பிக்பாஸ் முடிந்து வெளியே வந்ததும் காட்டுக்கு சென்றார் ரியோ.
தனது மனைவி மற்றும் மகளுடன் காட்டில் சுற்றிய போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தார். இந்நிலையில் தனது மனைவியுடன், கடலில் குளிப்பது, காட்டில் என்ஜாய் செய்வது என சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மேலும் ஆம்.. நான் மிகவும் சார்ந்த நபர் தான்.. நீ என் வாழ்க்கையை அழகாக்குகிறாய்.. உன்னை வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என நான் உறுதியளிக்கிறேன் திருமண நாள் வாழ்த்துகள் என தனது மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டா ஹேண்டிலை குறிப்பிட்டு ஐ லவ் யூ சோ மச் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram